பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு நடைமுறை; சலுான்களுக்கு எச்சரிக்கை

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:''பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாத சலுான்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட மாட்டாது'' என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஊரடங்கால், முடி திருத்தகங்கள் (சலுான்) செயல்பட அனுமதிக்கப்படவில்லை. வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஊரகப்பகுதிகளில் மட்டும், சலுான்கள் செயல்படத் துவங்கியுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், சலுான் கடைகள் பலவும் திறக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தகங்கள், பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.நுழைவாயிலில் கைகளைக் கழுவும் வசதி அல்லது கை சுத்திகரிப்பானை வைத்திருக்க வேண்டும். உரிமை யாளர்களும், ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் அவசியம். ஒரு நாற்காலி உள்ள முடி திருத்தகங்களில், ஒரு வாடிக்கையாளர் மட்டும் அனுமதிக்க வேண்டும்.குளிர்சாதன வசதி, கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. கிருமிநாசினிகள் நிரப்பப்பட்ட தொட்டிகளில், உபகரணங்கள் சுத்தம் செய்யப்பட்டு, முடி உலர்த்தும் இயந்திரங்களைக் கொண்டு உலர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.'முடி திருத்தகங்களில், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து, அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். ஆய்வின்போது, உத்தரவைப் புறக்கணிக்கும் முடி திருத்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது,' என்று அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X