ஆம்புலன்ஸ் நுழைய முடியாமல் அவதி: அரசு மருத்துவமனை முன் வாகனங்கள் பார்க்கிங்| Dinamalar

ஆம்புலன்ஸ் நுழைய முடியாமல் அவதி: அரசு மருத்துவமனை முன் வாகனங்கள் பார்க்கிங்

Added : மே 22, 2020
Share
 ஆம்புலன்ஸ் நுழைய முடியாமல் அவதி: அரசு மருத்துவமனை முன் வாகனங்கள் பார்க்கிங்

கோவை:கோவை அரசு மருத்துவமனைக்கு வெளியில், பார்க்கிங் செய்யப்படும், டூவீலர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக, மருத்துவமனையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.மருத்துவமனை வளாகத்தை, நோயாளிகளின் உறவினர்களை விட, வெளிநபர்கள்தான் அதிகம் பார்க்கிங் செய்யும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.இதனை, தடுக்கும் விதமாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மருத்துவமனைக்குள், வெளி வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதால், வழக்கம்போல் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு வெளியில், 3 அடுக்குகளாக பைக்குகள் பார்க்கிங் செய்யப்படுவதால், கனரக வாகனங்கள் மட்டுமல்லாது, அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் கூட வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவமனை (பொ) டீன் காளிதாஸ் கூறுகையில், ''வெளியில் நிறுத்தப்படுவதில், பாதி வாகனங்களுக்கும், இங்குள்ள நோயாளிகளுக்கும் தொடர்பு இல்லை. இந்த நேரத்தில், உள்ளே பார்க்கிங் செய்ய அனுமதித்து விட்டால் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மாட்டார்கள், மேலும் கூட்டம் கூட்டமாக நின்று, பேச துவங்கி விடுவர். ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. எனினும், இனி நுழைவாயில் அருகே வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X