பொது செய்தி

தமிழ்நாடு

தபால் சேவையில் பங்களிப்பு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:தபால்துறையில், கடந்த நிதியாண்டில் அதிகபட்ச புதிய தபால் சேமிப்பு கணக்கு துவங்கியதற்கான பட்டியலில் மேற்கு மண்டலத்திலே திருப்பூர் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.தபால் பட்டுவாடா தவிர, சிறுசேமிப்பு, ஆயுள் காப்பீடு திட்டம், கிராம ஆயுள் காப்பீடு திட்டம், மணியாடர் சேவை, தபால்தலை விற்பனை, இ-போஸ்ட், ஆன்லைன் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு வர்த்தக ரீதியான சேவைகளிலும் தபால்துறை ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வரும் தபால்துறை, ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும், சிறப்பாக பங்காற்றிய தபால் கோட்டங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது.அவ்வகையில், 2019-20ம் நிதியாண்டில் திருப்பூர் கோட்டம், 78 ஆயிரத்து, 557 புதிய சேமிப்பு கணக்குகள் துவக்கி முதலிடம் வகிக்கிறது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 11 ஆயிரத்து, 350 கணக்குகள் துவக்கி சிறந்த கோட்டமாக திருப்பூர் திகழ்கிறது. இதில், திருப்பூர் தலைமை தபால் நிலையம், திருப்பூர் வடக்கு, காந்திநகர், பூலுவபட்டி, கண்ணம்பாளையம் நிலையங்களில் அதிக கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக, இச்சாதனை நிகழ்ந்துள்ளதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X