சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னரில் தொழிலாளர்கள்; பல்லடம் போலீசார் விசாரணை

Added : மே 22, 2020
Share
Advertisement
 கன்டெய்னரில் தொழிலாளர்கள்; பல்லடம் போலீசார் விசாரணை

பல்லடம்:கன்டெய்னரில் சொந்த ஊர் செல்ல முயன்ற வட மாநில தொழிலாளர்களை, பல்லடம் போலீசார் தடுத்து நிறுத்தினர்.கோவை அருகே சின்னியம்பாளையம், கருமத்தம்பட்டி, பல்லடத்தை அடுத்த லட்சுமி மில்ஸ் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும், 25க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், நேற்று முன்தினம் கன்டெய்னர் மூலம் ஜார்க்கண்ட் செல்லும்போது, பல்லடத்தில் பிடிபட்டனர்.ஒடிசாவிலிருந்து கோவைக்கு, மருந்து பொருட்கள் இறக்கி சென்ற கன்டெய்னரை மறித்து, லாரி டிரைவரிடம் மன்றாடியதில், அவர் தொழிலாளர்களை ஏற்றியுள்ளார். அவிநாசி அருகே தெக்கலுார் செக்போஸ்டில் போலீசாரிடம் சிக்கினர். அதன்பின், கன்டெய்னர் லாரி, பல்லடத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.'ஊருக்கு செல்வதற்காக விண்ணப்பித்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் மீண்டும் வேலை பார்க்கும் இடத்துக்கு செல்ல விரும்பவில்லை. ஊருக்கு அனுப்பி வையுங்கள்' என, போலீசாரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பல்லடம் போலீசார், தொடர்ந்து தொழிலாளர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X