பொது செய்தி

தமிழ்நாடு

கோவை வந்த 21 பேருக்கு வைரஸ் தொற்று கிடையாது

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:மகாராஷ்டிரா, ஐதராபாத்தில் இருந்து கோவை வந்த, 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா 15 மற்றும் ஐதராபாத் 6 பேர் என மொத்தம் 21 பேர் ரயில் வாயிலாக, கோவைக்கு வந்தனர்.பிரத்யேக மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட, இவர்களுக்கு சுகாதாரதுறையினர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தபடியாக, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயிலில் அரக்கோணம் வழியாக, நேற்று கோவை வந்த, 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X