சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் துன்புறுத்தல்: சிறுவன் மீது 'போக்சோ'

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், 14 வயது மாணவியை கடத்திய பிளஸ் 1 மாணவர் மீது, போக்சோ சட்டம் பாய்ந்தது.கோவையை சேர்ந்த, 14 வயது பள்ளி மாணவியை காணவில்லை என, பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணையில், சிறுமி பயிலும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 17 வயது மாணவர் கரூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு, சிறுமியை பைக்கில் கடத்தி சென்றது தெரிந்தது.கரூர் விரைந்த போலீசார், இருவரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார், சிறுவர் பாலியல் சீண்டல் மற்றும் போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு செய்து, மாணவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், மாணவர், சிறுமியை மூன்று மாவட்ட சோதனை சாவடிகளில், 'கவனமான கண்காணிப்பை' கடந்து, கரூர் அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X