சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியால் குத்திய தி.மு.க., பிரமுகர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

பழநி:பணப்பிரச்னையில் பூ வியாபாரியை கத்தியால் குத்திய பழநி தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

பழநி பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சின்னவர் என்ற அப்துல்ரகுமான் 37. நகர தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கும், பூ வியாபாரம் செய்து வரும் சதாம்உசேன் 24,என்பவருக்கும் இடையே பணப்பிரச்னை இருந்தது.

இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான் கத்தியால் சதாம்உசேனை குத்தினார். காயம் அடைந்த சதாம் உசேன் பழநி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அப்துல்ரகுமானை பழநி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X