பொது செய்தி

தமிழ்நாடு

உக்கடம் பெரிய குளத்தில் மதகுகளுடன் மிகைபோக்கி

Added : மே 22, 2020
Share
Advertisement
 உக்கடம் பெரிய குளத்தில் மதகுகளுடன் மிகைபோக்கி

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், கோவை, உக்கடம் பெரிய குளத்தில், உபரி நீர் வெளியேறும் தடுப்பணை முழுமையாக இடிக்கப்பட்டு, மதகுகளுடன் மிகை போக்கி, கான்கிரீட் கட்டுமானமாக ஏற்படுத்தப்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள, 9 குளங்களும் மேம்படுத்தப்படுகின்றன. இதில், உக்கடம் குளத்தின் முகப்பு பகுதி ரூ.39.74 கோடியிலும், மற்ற பகுதிகளில் ரூ.62.17 கோடியிலும் பொலிவூட்டும் பணிகள் நடந்து வந்தன. 'கொரோனா' பிரச்னை காரணமாக, கடந்த ஒன்றரை மாதமாக பணிகள் தடைபட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தி இருப்பதால், மீண்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன.உக்கடம் குளத்தின் சுற்றுப்பகுதிகளில், கரை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்தாண்டு பருவ மழை சமயத்தில், குளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற, மிகை போக்கி கட்டுமானத்தை இடிப்பதாக, தகவல் பரவியது. மீனவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தினர்.இதன் பின், பொதுப்பணித்துறையினருடன் ஆலோசித்து, உபரி நீரை நொய்யலுக்கு திருப்பி விடும் வகையில், மதகுகளுடன் மிகை போக்கி கான்கிரீட் கட்டமைப்பாக ஏற்படுத்தப்படுகிறது.இவ்வேலை முடிய பல மாதங்களாகும் என்பதால், பருவ மழை சமயத்தில் கிடைக்கும் நீரை தேக்கும் வகையில், கரையில் மண் கொட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X