விமான சரக்கு கட்டணம் உயர்வு; ஏற்றுமதி நிறுவனங்கள் பரிதவிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:விமானத்துடன், சரக்கு கட்டணமும் உயரே பறப்பதால், தயாரித்த ஆடைகளை வெளிநாடு அனுப்பமுடியாமல், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் திணறுகின்றன.திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட, உலகளாவிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கின்றன. விரைவாக ஆடை தயாரித்து, கப்பலில் அனுப்பும் நடைமுறையை ஏற்றுமதி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.
கொரோனாவால், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் திருப்பூரில் ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வால், 6ம் தேதி முதல் திருப்பூரில் ஆடை உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.தயாரிப்பை முடித்த நிறுவனங்கள், ஆடைகளை அனுப்ப முயற்சி செய்கின்றன. ஆனால், காலம் கடந்து விட்டதால், வர்த்தகர் பலரும், ஆடைகளை விமானத்தில் அனுப்பினால் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால், விமானங்களின் சரக்கு கட்டணம் அபரிமிதமாக உயர்தப்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் தவிர்க்கின்றனர்.
திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:சாதாரண நாட்களில், கிலோவுக்கு, 85 முதல் 100 ரூபாக்குள் இருக்கும் சர்வதேச விமான சரக்கு கட்டணம், கொரோனாவுக்குப்பின், மிக கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது, கிலோவுக்கு, 400, 600, 900 ரூபாய் என்ற வகையில், கட்டணம் உயர்ந்துள்ளது.ஆடைகளை விமானத்தில் அனுப்பினால், நஷ்டத்தையே சந்திக்க நேரிடும். தேக்கி வைத்தாலும், முடங்கி விடும். இதனால், வரும். ஆடை தயாரிப்புக்கு வாங்கிய கடன்களை செலுத்துவது, ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு உரிய கட்டணங்களை செலுத்துவதும் இயலாததாக உள்ளது.மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில் விமான சரக்கு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து, தொழில் துறையை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X