போத்தனூர்:சுந்தராபுரத்தில், துாய்மை பணியாளர்களை பணிக்கு அழைத்து வரும் அரசு பஸ் டிரைவர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது.
ஊரடங்கால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உக்கடம், வெள்ளலூர் குடியிருப்பு, கோணவாய்க்கால்பாளையம். செட்டிபாளையம், ஜெ.ஜெ.நகர், மலுமிச்சம்பட்டி சுற்றுப்பகுதிகளில் வசிப்போர், தினமும் நான்கு அரசு பஸ்களில் பணிக்கு வந்தனர். இவர்களை அழைத்து வரும் பணியில், குணசேகரன் உட்பட நான்கு டிரைவர்கள் ஈடுபட்டனர். இவர்களின் பணியை பாராட்டி, சுந்தராபுரம், சிறுவாணி டேங்க் பகுதியில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
நான்கு டிரைவர்களுக்கும் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தப்பட்டது. ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது. துாய்மை பணியாளர்கள் மலர் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்ய புனிதன், ஜீவன் முருகராஜ், மேற்பார்வையாளர் காளியப்பன் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE