சமையல் தொழிலாளர்கள் தவிப்பு: நிவாரண உதவி வழங்க எதிர்பார்ப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement
அவிநாசி:ஊரடங்கு நீடிப்பதால், சமையல் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.ஊரடங்கால், சுபநிகழ்ச்சி, கோவில் விழா ஆகியவை நடப்பதில்லை. இதனால், குடும்பத்தை வழிநடத்த முடியாமல் சமையல் கலைஞர்கள், தவிக்கின்றனர். விருந்து தயாரிப்பதில் கைதேர்ந்த இவர்கள், உணவுக்கு வழியின்றி தவிக்கும் நிலை கூட ஏற்பட்டிருக்கிறது.அவிநாசியை சேர்ந்த சமையல் கலைஞர்கள்

அவிநாசி:ஊரடங்கு நீடிப்பதால், சமையல் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.ஊரடங்கால், சுபநிகழ்ச்சி, கோவில் விழா ஆகியவை நடப்பதில்லை. இதனால், குடும்பத்தை வழிநடத்த முடியாமல் சமையல் கலைஞர்கள், தவிக்கின்றனர். விருந்து தயாரிப்பதில் கைதேர்ந்த இவர்கள், உணவுக்கு வழியின்றி தவிக்கும் நிலை கூட ஏற்பட்டிருக்கிறது.அவிநாசியை சேர்ந்த சமையல் கலைஞர்கள் கூறியதாவது:தற்போது வருமானமின்றி ஆயிரக்கணக்கான சமையல் கலைஞர்களின் குடும்பத்தினர் தவிக்கின்றனர். இந்த ஆண்டு முழுவதுமே எங்களுக்கு வேலை இருக்காது. சமையல் தொழிலை அரசு அங்கீகரிக்காததால், நலவாரியத்தில் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை.எனவே, மாநில அரசு, அம்மா உணவகத்தில் எங்களுக்கு பணி வழங்க வேண்டும். அனைத்து தொழில் சார்ந்தோருக்கும் நிவாரணம் வழங்குவது போன்று, சமையல் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கி, நலவாரியத்தில் இணைக்க வேண்டும். குடும்பத்தை நடத்த இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X