பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி சாகுபடி விவசாயிகள் அதிகரிப்பு: விற்பனை சங்கத்தினர் தகவல்

Added : மே 22, 2020
Share
Advertisement
 பருத்தி சாகுபடி விவசாயிகள் அதிகரிப்பு: விற்பனை சங்கத்தினர் தகவல்

அவிநாசி:திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கடந்தாண்டு பருத்தி விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், கருவலுார் உள்ளிட்ட இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில், சத்தி, தாராபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும், ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.இவர்கள், புதன்தோறும் அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில், பருத்தி விற்பனை செய்கின்றனர். சாகுபடி செய்த பருத்தி, மாநிலத்தின் பல இடங்களில் உள்ள வர்த்தகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்த, 2018 -19ல், 10 ஆயிரத்து 626 விவசாயிகள், 2,433 மெட்ரிக் டன் பருத்தி, ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர். இதன் மதிப்பு, 13.14 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில், (2019-20), 13 ஆயிரத்து 255 விவசாயிகள், 2,568 மெட்ரிக் டன் பருத்தி விற்பனை செய்துள்ளனர்; இதன் மதிப்பு, 13.32 கோடி ரூபாய்.அதன்படி, முந்தைய ஆண்டைக் காட்டிலும், கடந்தாண்டு, பருத்தி ஏல மையத்திற்கு, 2,629 விவசாயிகள் கூடுதலாக வந்துள்ளனர். 135 மெட்ரிக் டன் பருத்தி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. வர்த்தக மதிப்பும், முந்தைய ஆண்டைக் காட்டிலும், 18 லட்சம் ரூபாய் அதிகரித்திருக்கிறது.இது குறித்து, விற்பனை சங்க நிர்வாகிகள் கூறியதாவது;கடந்தாண்டு, பருத்தி விளைவிக்கும் இடங்களில் பரவலாக மழை பெய்ததால், அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். அதன் விளைவாகவே, பருத்தி வரத்து அதிகரித்திருக்கிறது. முந்தைய ஆண்டை காட்டிலும், கடந்தாண்டில், பருத்தி வரத்து அதிகரித்திருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X