பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகளில் திட்ட பணிகள்: மாவட்ட  கலெக்டர் நேரடி ஆய்வு 

Added : மே 22, 2020
Share
Advertisement
 பேரூராட்சிகளில் திட்ட பணிகள்: மாவட்ட  கலெக்டர் நேரடி ஆய்வு 

கோவை:கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும், திட்டப்பணிகளை, கலெக்டர் ராஜாமணி நேற்று ஆய்வு செய்தார்.நகர்புற, கிராமப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளின் கீழ், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.அதன் படி, கருமத்தம்பட்டி பேரூராட்சியில், 3 கோடி ரூபாய் மதிப்பில் சோமனுார் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தாய்மார்கள் பாலுாட்டும் அறை, தனியார் கடைகள், பயணிகள் இருக்கை மற்றும் நடைபாதை, கழிப்பிட வசதிகள், குடிநீர், மின்விளக்கு, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டு வருகிறது.தவிர, எலுச்சம்பாளையம் முதல் செங்குடந்தாளி வரையில், 3 கி.மீ., துாரத்திற்கு 1.40 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை போடும் பணி நடந்து வருகிறது. இவ்விரு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்து, உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கினார்.ஆய்வின் போது, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், செயற்பொறியாளர் ரகுபதி, உதவிப்பொறியாளர் மனோகரன், கருமத்தம்பட்டி செயல் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X