சம்பவம் செய்தி

தமிழ்நாடு

120 ஆண்டு ஆலமரத்தை வெட்ட முயற்சி: தாலுகா ஆபீஸ் அருகே அட்டூழியம்

Added : மே 22, 2020
Share
Advertisement
 120 ஆண்டு ஆலமரத்தை வெட்ட முயற்சி: தாலுகா ஆபீஸ் அருகே அட்டூழியம்

திருப்பூர்:செவந்தாம்பாளையத்தில், 120 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, 37வது வார்டு செவந்தாம்பாளையம், பஸ் ஸ்டாப் அருகே, 120 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் உள்ளது. தெற்கு தாலுகா அலுவலகம் அருகே உள்ள, அந்த மரத்தை சிலர் கூட்டாக சேர்ந்து நேற்று வெட்டியுள்ளனர்.பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், வருவாய்த்துறையினர் தடுத்து, உடனடியாக போலீசில் புகார் செய்தனர். ரூரல் போலீசார் மரம் வெட்டிக்கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர்.இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:பஸ் ஸ்டாப் அருகே வசிக்கும் சிலரது ஏற்பாட்டில், மர வியாபாரியிடம் விலை பேசி, வெட்டி உள்ளனர். மரத்தின், 25 சதவீதத்தை வெட்டியதில், மூன்று டன் அகற்றப்பட்டுள்ளது. போலீசில், வெட்டிய கூலித்தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காரணமான நபர்களை தப்பவிடாமல், இயற்கை வளத்தை அழிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இப்பிரச்னை குறித்து, தெற்கு தாசில்தார் சுந்தரத்திடம் கேட்ட போது, ''யாருக்கும் இடையூறு இல்லாத நிலையில், ஆலமரத்தை வெட்டியதை யாரும் ஏற்க முடியாது. மரம் வெட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.டி.ஓ.,வுக்கு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், வருவாய்த்துறை சார்பில், அபராதமும் விதிக்கப்படும்,'' என்றார்.விலைபேசியது யார்?தமிழக அரசின் வனத்துறையும், பல்வேறு அமைப்புகளும் மரம் வளர்ப்பை இயக்கமாக கொண்டுள்ளன. மரங்கள் அழியக்கூடாது என, வேருடன் மரத்தை எடுத்து, மற்றொரு இடத்தில் நட்டு வளர்க்கும் பெருமையை கொண்டது திருப்பூர்.ஆனால், அரசு நிலத்தில் உள்ள மரத்தை, விலைபேசி விற்கும் அளவுக்கு அத்துமீறிய நபர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது, ஒட்டுமொத்த பசுமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X