பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளிகளில்ஆன்-லைனில் சேர்க்கை!

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி பள்ளிகளில், முதலாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, 'ஆன்-லைனில்' மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.தமிழ் வழி மட்டுமின்றி, ஆங்கில வழி கல்வி மற்றும் கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, மாநகராட்சி பள்ளிகளில் கல்வி கற்பிப்பதால், சமீபகாலமாக மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, மாணவர் சேர்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காக, 'ஆன்-லைன்' மூலமாக, புதிய மாணவர்கள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநகராட்சி பள்ளிகளில், முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, புதிய மாணவர் சேர்க்கைக்கு, https://forms.gle/9caEWry7YaW679xG6 என்கிற 'லிங்க்'கில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு, 98429 51127, 94420 75061 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X