பொது செய்தி

தமிழ்நாடு

'இலவச மின்சாரம் ரத்தாகிறதா?'

Added : மே 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:'எக்காரணத்தை கொண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,' என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து, அதன் மாநில செயல் தலைவர் வெற்றி வெளியிட்ட அறிக்கை:பல லட்சம் விவசாயிகள், 14 ஆண்டுகள் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தி விவசாயத்துக்கு இலவச மின்சாரம் பெற்றனர்.போராட்டத்தில், 64 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில்

திருப்பூர்:'எக்காரணத்தை கொண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,' என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து, அதன் மாநில செயல் தலைவர் வெற்றி வெளியிட்ட அறிக்கை:பல லட்சம் விவசாயிகள், 14 ஆண்டுகள் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தி விவசாயத்துக்கு இலவச மின்சாரம் பெற்றனர்.போராட்டத்தில், 64 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வாறு, பல போராட்டம் மூலம் பெற்ற, 20 லட்சம் இலவச மின் இணைப்புகளில்தான் இன்றும் தமிழகத்தில் விவசாயம் நடைபெறுகிறது. விளைபொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. இங்கு ஜீவநதி இல்லை. பாசனம் என்பது கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம்தான் நடக்கிறது.மத்திய அரசு மின்சார சட்ட திருத்தம் மூலம் இதைப்பறிக்க முயற்சிக்கிறது. மாநில அரசுகள் இதை பின்பற்ற வலியுறுத்துகிறது. இதை தமிழக விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். மாநில அரசும், பிற கட்சியினரும், மத்திய அரசின் முடிவை திரும்ப பெற எதிர்ப்பு தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.l தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. செயலாளர் குமார் விவசாயிகளின் பிரச்னைகளை விளக்கி பேசினார். இலவச விவசாய மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும், உயர்மின் கோபுர திட்டத்தில் கையகப்படுத்தும் நிலத்துக்கு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும், என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X