மாநகராட்சிக்கே திருப்பி அனுப்புங்க! சமுதாய அமைப்பாளர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சிக்கே திருப்பி அனுப்புங்க! சமுதாய அமைப்பாளர்கள் எதிர்பார்ப்பு

Added : மே 22, 2020
Share

கோவை:அயல் பணியாக மகளிர் திட்டத்துக்கு நியமிக்கப்பட்ட சமுதாய அமைப்பாளர்களை, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், நகர்ப்புறங்களில் வசிக்கும், ஏழை எளிய மக்கள் மேம்பாட்டுக்காக, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதற்கு, 217 சமுதாய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரிந்தனர்.பின், அவர்களுக்கு, மகளிர் திட்ட அலுவலகத்தில் அயல் பணியிடம் ஒதுக்கப்பட்டது. இவர்களது பணிக்காலம், கடந்த, 2019, மே, 31ல் முடிந்ததால், ஏற்கனவே பணியாற்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு திருப்பி அனுப்ப, மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருக்கு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதினார்.ஆனால், அவர்களை திருப்பி அனுப்பவில்லை. வரும், 31ம் தேதியுடன் அயல் பணி காலம், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.அதனால், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கை, சமுதாய அமைப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பது, மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்படுத்துவது, சுழல்நிதி பெற்றுத்தருவது உள்ளிட்ட பணிகளை, சமுதாய அமைப்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்த இவர்கள், அயல்பணியாக மகளிர் திட்ட அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனர்.ஒரு அரசு ஊழியரை, அயல் பணியாக மூன்று ஆண்டுகள் மட்டுமே பணியமர்த்த முடியும். மிக அவசரமான காலத்தில், சிறப்பு உத்தரவு பெற்று, 4 ஆண்டுகள் பணியமர்த்தலாம். 4 ஆண்டுகளுக்கு மேலாக, அயல் பணியாக அமர்த்த வழிவகையில்லை.இவர்களை, மகளிர் திட்ட அலுவலர்கள், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியுள்ளனர். அதனால், விருப்ப ஓய்வில் செல்ல பலரும் நினைப்பதால், வரும், 31க்குள், ஏற்கனவே பணிபுரிந்த நகராட்சி, மாநகராட்சிக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஒரு அரசு ஊழியரை, அயல் பணியாக மூன்று ஆண்டுகள் மட்டுமே பணியமர்த்த முடியும். மிக அவசரமான காலத்தில், சிறப்பு உத்தரவு பெற்று, 4 ஆண்டுகள் பணியமர்த்தலாம். 4 ஆண்டுகளுக்கு மேலாக, அயல் பணியாக அமர்த்த வழிவகையில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X