பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில பஸ்கள் திருப்பூருக்கு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:அண்டை மாநிலங்களில் பயணிகளுக்கான பஸ் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், பஸ்கள் திருப்பூர் வந்து செல்லுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நேற்று முதல் பயணிகளுக்கான பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.எர்ணாகுளத்தில் இருந்து திருப்பூருக்கு, குருவாயூரில் இருந்து தாராபுரம் வழியாக பழநி, பாலக்காட்டில் இருந்து கோவை, காங்கயம் வழியாக வேளாங்கன்னிக்கு கேரள அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் ஊரடங்களில் பெருமளவு தளர்வு அறிவிக்கப்பட்டு பயணிகளுக்கான பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் திருப்பூருக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.அண்டை மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,' எல்லையை கடந்து வர, தமிழக அரசுகளிடம் ஒப்புதல் கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இசைவாணை கிடைத்தால், பஸ்கள் தமிழகம் வந்து செல்லும். அதே நேரம், சமூக இடைவெளி கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது கட்டாயம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X