பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் 'லேட்'டாகும்! இயக்குனரிடம் மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் தொடர்பாக, 'ஸ்மார்ட் சிட்டி' மிஷன் இயக்குனர் குணால் குமார், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமாருடன், காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசித்தார்.கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'கொரோனா' காரணமாக, இப்பணிகள் அனைத்தும், கடந்த ஒன்றரை மாதமாக தடைபட்டு இருந்தது.தற்போது ஊரடங்கு தளர்த்தியிருப்பதால், பணிகள் துவக்கப்பட்டு இருக்கின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' மிஷன் இயக்குனர் குணால் குமார், அனைத்து மாநகராட்சி கமிஷனர்களுடன் காணொளி மூலம் நேற்று பேசினார்.அப்போது, 'கொரோனா' வைரஸ் பரவல் தடுக்க, மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று காய்கறி வினியோகித்தது, கிருமி நாசினி தெளித்தது, துாய்மை பணி மேற்கொண்டது தொடர்பாக, கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, நேரடியாக 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட வங்கி கணக்கிற்கு அனுப்புவது குறித்தும், வெளிமாநில/ வெளிமாவட்ட தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதால், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க முடியாத சூழல் இருக்கிறது; காலநீட்டிப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.அதிகமான மக்கள் செல்லும் வீதிகளில், நடைபாதை அமைக்க, ஜெர்மனி ஆலோசனை குழு தெரிவித்த புதுமையான கருத்துக்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தொடர்பாகவும், மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்தை செயல்படுத்துவது குறித்தும் கமிஷனர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X