மத்திய கூட்டுறவு வங்கி ரூ.17 கோடி கடனுதவி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய கூட்டுறவு வங்கி ரூ.17 கோடி கடனுதவி

Added : மே 22, 2020
Share

ஊட்டி:'கொரோனா'வால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த, 26 ஆயிரம் பேருக்கு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை, மத்திய கூட்டுறவு வங்கி வழங்கியது.ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மாவட்டத்தில் உள்ள, 26 ஆயிரத்து, 640 பயனாளிகளுக்கு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத், மேலாண்மை இயக்குனர் வசந்தா முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 24 ஆயிரத்து, 730 பேருக்கு, 12 கோடியே, 36 லட்சம், 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, ஒரு கோடியே 25 லட்சம், சிறு வணிக கடன்; பணிமனை உரிமையாளர்கள், 500 பேருக்கு, 1.25 கோடி, டாக்சி ஓட்டுனர்கள், 500 பேருக்கு, 1.25 கோடி; ஓட்டுனர்களுக்கு சிறுவணிக கடனாக, 200 பேருக்கு, 50 லட்சம் வழங்கப்பட்டது. முடி திருத்துவோருக்கு சிறு வணிக கடனாக, 110 பயனாளிகளுக்கு, 56 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X