பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் யானைகள் முகாம் :வனத்துறையினர் எச்சரிக்கை

Added : மே 22, 2020
Share
Advertisement
 சாலையில் யானைகள் முகாம் :வனத்துறையினர் எச்சரிக்கை

குன்னுார்:'குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் டிரைவர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில், 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது, பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், இந்த யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து, பலா பழத்தை உட்கொள்ள, அவ்வப்போது சாலையை கடந்து வருகின்றன. நேற்று கே.என். ஆர்; குரும்பாடி பகுதிகளில் இரு குழுக்களாக யானைகள் முகாமிட்டன.அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்காவலர் ராம்குமார், வேட்டை தடுப்பு காவலர் ஹரிகரன் ஆகியோர், அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி யானைகளை கடக்க உதவி செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இவ்வழியாக வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்; பலா சீசன் முடியும் வரை, இங்கு யானைகள் முகாமிடும் என்பதால், இரவிலும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X