கோவில்வழி போகும் ரோடு வாகன ஓட்டிக்கு பெரும்பாடு

Added : மே 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:வீரபாண்டி வழியாக கோவில்வழி செல்லும் ரோடு, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்து வசதிக்காக இதை சீரமைக்க வேண்டும்.திருப்பூர், தாராபுரம் ரோடு வழியேதான், தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல், பல்லடம் ரோடு, கோவை, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் முக்கிய ரோடாக உள்ளது.திருப்பூர் நகருக்குள் நுழையாமல் பல்லடம் ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டை இணைக்கும்
 கோவில்வழி போகும் ரோடு வாகன ஓட்டிக்கு பெரும்பாடு

திருப்பூர்:வீரபாண்டி வழியாக கோவில்வழி செல்லும் ரோடு, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்து வசதிக்காக இதை சீரமைக்க வேண்டும்.திருப்பூர், தாராபுரம் ரோடு வழியேதான், தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல், பல்லடம் ரோடு, கோவை, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் முக்கிய ரோடாக உள்ளது.திருப்பூர் நகருக்குள் நுழையாமல் பல்லடம் ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டை இணைக்கும் வகையில், வீரபாண்டி பிரிவிலிருந்து பலவஞ்சிபாளையம் வழியாக கோவில் வழி சென்று சேரும் வகையில் இந்த ரோடு உள்ளது.இதில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில நாட்களில், தற்காலிக பஸ் ஸ்டாண்டும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.இதனால், பல்லடம் ரோடு - கோவில்வழி இடையே உள்ள இந்த ரோடு, போக்குவரத்து அதிகமுள்ளதாக மாறப்போகிறது.ஆனால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில், ரோடு பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக, மோசமான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X