சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி ஒருவர் காயம்: அச்சத்தில் கிராம மக்கள்

Added : மே 22, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்தார்.கூடலுார், தொரப்பள்ளி அருகே உள்ள, அள்ளூர்வயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்,45. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். நேற்று, அதிகாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்தபோது, காட்டு யானை தாக்கியது. மக்கள் சப்தமிட்டு, யானையை விரட்டினர்.இதில், காயமடைந்த அவர், கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டார். வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேல் சிகிச்சைக்காக, அவரை ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் உடலில் காயத்துடன் உலாவரும் யானை, இரவில் குடியிருப்பு பகுதிக்கு வந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க வேண்டும்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'யானையின் காயத்துக்கு கால்நடை டாக்டர் ஆலோசனைபடி சிகிச்சை அளித்து, கண்காணித்து வருகிறோம். எனவே, மக்கள் இரவில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X