கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட மண்டகரையை சேர்ந்தவர் சுரேஷ்,40. இவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.நள்ளிரவு, 12:00 மணிக்கு மண்டகரை கிராமத்தில் நுழைந்த, காட்டு யானை, சுரேஷ் வீட்டை சேதப்படுத்தி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொண்டது. சேதமடைந்த வீட்டை வனத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். 'தங்களுக்கு, மாற்றிடம், திட்டத்தின் கீழ், வேறு இடம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE