சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குவைத்தில் இருந்து வந்த மூவருக்கு பரிசோதனை

Added : மே 22, 2020
Share
Advertisement

கோத்தகிரி:குவைத்தில் இருந்து வந்த கர்ப்பிணி உட்பட, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், கோத்தகிரியில் தனிமையில் வைக்கப்பட்டனர்.கோத்தகிரி காம்பாய் கடை பகுதியை சேர்ந்த, ஏழு மாத கர்ப்பிணியுடன், இரண்டு வயது குழந்தை மற்றும் அவரது தந்தை ஆகிய, மூவர் குவைத்தில் இருந்து, நேற்று முன்தினம் கொச்சின் வந்துள்ளனர்.அங்கு இ-பாஸ் பெற்று நேற்று காலை, கோத்தகிரிக்கு வந்துள்ளனர். குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர்கள், அவர்களை பரிசோதனை செய்தனர். பிறகு, கோத்தகிரி தாசில்தார் மோகனா தலைமையில், சுகாதார துறையினர் பரிசோதனை மாதிரி எடுத்து, மிளிதேன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவர்களை தனிமைப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X