பொது செய்தி

தமிழ்நாடு

கிளப்புறாங்கய்யா...!

Added : மே 22, 2020
Share
Advertisement
 கிளப்புறாங்கய்யா...!

என்ன சத்தம் அந்த நேரம்பெங்களுரு நகரத்தில் நேற்று மதியம் திடீரென மர்மமாக,'பூம்' என்ற சத்தம் கேட்டதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான காரணம் என்பது குறித்து டுவிட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பெரிய விவாதமே நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையமும், இதற்கான தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சத்தம் இல்லை என்று மட்டும் அறிவித்துள்ளது. விமான நிலையம் முதல், 54 கி.மீ., தொலைவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள, 'எலக்ட்ரானிக் சிட்டி' வரை இந்த சத்தம் கேட்டுள்ளது.பாத்திரம் சொல்லும் சேதி நம் மூதாதையர் பயன்படுத்திய ரயில் அடுக்கு பாத்திரத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதன் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. அதில் பெண்மணி ஒருவர் ஒரு பாத்திரத்தை திறந்ததும், காய் செய்வதற்கு இரு அகலமான பாத்திரத்தை எடுத்து வைக்கிறார். அதற்குள் சிப்பல் எனும் சாதம் வடிக்கும் பாத்திரம் உள்ளது. பொரியல், வெங்காயம் தாளிக்க இலுப்பை சட்டி, டவரா, செம்பு, கூட்டு, குழம்பு வைக்க தனித்தனி பாத்திரம், இறுதியாக, பெரிய தவளை பானை என அனைத்தும் ஒரே பாத்திரத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது, இணையவாசிகளை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.இப்படி பண்றீங்களேம்மா?ஐஸ்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் ஒருவர், தன் குழந்தையை பால்கனியில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார்.
அப்போது, ஊஞ்சலை வேகமாக இயக்கியதால், குழந்தை பால்கனியின் விளிம்பு வரை சென்றுவிட்டு திரும்புகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 80 அடி உயரத்தில் நிகழ்ந்த இச்சம்பவ காட்சியை, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து, தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
மனிதாபிமானம் மரணித்ததா...வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமியை காப்பாற்றாமல் மக்கள் கண்டுகொள்ளாமல் போகும் சிசிடிவி., காட்சி வெளியாகி உள்ளது. பீஹார் மாநிலம், பாட்னாவில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்து பல நிமிடங்கள் அந்த சிறுமியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த சாலை வழியாக பலர் கடந்து சென்றாலும், ஒருவரும் உதவிக்கு ஓடி வரவில்லை என்பது நெஞ்சை உலுக்கும் செயலாக உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், மனிதாபிமானம் மரணித்து விட்டதோ என கருத்து பதிவிடுகின்றனர்.
ஆனந்த யாழை மீட்டிய சூரிதனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சூரி, டுவிட்டரில் பகிர்ந்த படத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதில், சூரியும் அவர் மகள் மற்றும் மகனும் பைக்கில் அமர்ந்தபடி ஸ்டைலாக, 'போஸ்' கொடுத்துள்ளனர். சுட்டித்தனமாக சேட்டை செய்யும் படங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கு நெட்டிசன்கள், 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்... அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்' என்ற பாடலை 'டெடிகேட்' செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X