பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான 'இ-பாக்ஸ்' பயிற்சி நிறைவு

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான இரண்டு வார கால, 'இ-பாக்ஸ் பைத்தான்' பயிலரங்கு நேற்று நிறைவடைந்தது.தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும், 'ஏம்பிசாப்ட்' நிறுவன 'இ-பாக்ஸ்' இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இரண்டு வார கால பயிலரங்கு கடந்த, 7ம் தேதி துவங்கியது. உயர்கல்வியில் பல பாடங்களுக்கும் அடித்தளமாக இருக்கும் 'பைத்தான்' நிரலாக்கத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது.தினமும், இரண்டு மணி நேரம் தொழில்துறை வல்லுனர்கள் நேரலை வகுப்புகளை எடுத்தனர். பின், ஆறு மணி நேரம் இணையத்தில் நிகழ்நேர பயிற்சிகளை ஆசிரியர்கள் செய்தனர். 2,445 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆசிரியரும், 120 நிகழ்நேர பயிற்சி வினாக்களுக்கு தீர்வு கண்டனர். பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காணொளியில் அரசு பள்ளி ஆசிரியர்களை பாராட்டி, 'இ-சான்றிதழ்' வழங்கினார். பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.'ஏம்பிசாப்ட்' சி.எல்.ஓ., பாலமுருகன் கூறுகையில், 'ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இ-பாக்ஸ் உரிமங்களையும், பயிற்சி உள்ளடக்கத்தையும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். 'வகுப்பறைகளில், ஆசிரியர்கள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X