பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு உதவிய போலீசார்

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:விபத்தில் சிக்கி உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு போலீசார் ஒன்றிணைந்து, ஏழு லட்சம் ரூபாய் நிதி திரட்டி அளித்தனர்.சென்னை, பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ராம்கி. இவருக்கு திருமணமாகி ஓராண்டான நிலையில், கடந்த 3ம் தேதி பணிக்கு சென்று திரும்பியபோது மதுரவாயல் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி, இரு தங்கை மற்றும் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.இதையறிந்த, ராம்கியுடன், 2013ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போலீசார் அனைவரும் ஒன்று சேர்ந்து குடும்பத்துக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். மாநிலம் முழுவதும், 2013 பேட்ஜ் காவலர்களிடம் மாவட்ட வாரியாக உதவி தொகை பெறப்பட்டது. இவ்வாறு கிடைத்த, 7.14 லட்சம் ரூபாயை ராம்கியின் தந்தை அன்பழகன் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் கடந்த, 20ம் தேதி போலீசார் வழங்கினர்.போலீசார் கூறுகையில், 'தமிழக போலீசில், 2013ம் ஆண்டு, 12 ஆயிரம் பேர் புதிதாக பணிக்கு சேர்ந்தோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் நாங்கள் இணைந்து, 'வாட்ஸ்ஆப்' மற்றும் டெலிகிராம் குரூப் துவக்கினோம். இதன்மூலம் எங்கள் பேட்ஜ் மட்டுமின்றி மற்ற போலீசாருக்கும் எங்களால் முடிந்த உதவி செய்கிறோம். அரசு சார்பில் ராம்கியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. இருந்தும், அவருடன் பணிக்கு சேர்ந்த எங்கள் சார்பில் ஒரு உதவி செய்தது மனநிம்மதியை தருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X