உழவர் உற்பத்தியாளர் குழுவிற்குபண்ணைக் கருவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்குபண்ணைக் கருவி வழங்கல்

Added : மே 22, 2020
Share

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணைக் கருவி வழங்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல், விவசாயிகளுக்கு பண்ணைக் கருவியை வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய திட்டம் மற்றும் வேளாண்மைத் துறையின் பல்வேறு சிறப்பு திட்டங்களை உழவர்கள் அனைவரும் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.உழவர் உற்பத்தியாளர் கம்பெனி தொடங்க வேண்டும். அதற்கு விவசாயிகளுக்கு வேளாண்மை விற்பனைத் துறையின் வழிகாட்டுதலின்படி செயல் திட்டம் வகுத்து வங்கிகள் மூலம் கடன் பெற்று மூலதனத்தை பெருக்கி விவசாயிகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.வேளாண்மை அலுவலர் நடராஜன், மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X