அதிரடி! வியாபாரிகள் கடையடைப்பால் நகராட்சி, வேளாண் துறை...கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் இயங்க ஏற்பாடு| Dinamalar

தமிழ்நாடு

அதிரடி! வியாபாரிகள் கடையடைப்பால் நகராட்சி, வேளாண் துறை...கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் இயங்க ஏற்பாடு

Added : மே 22, 2020
Share
திண்டிவனம்;திண்டிவனத்தில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு காரணமாக, பொது மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க நகராட்சி மற்றும் வேளாண்துறை சார்பில் கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட்டன.திண்டிவனத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. நேரு வீதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், திண்டிவனம்

திண்டிவனம்;திண்டிவனத்தில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு காரணமாக, பொது மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க நகராட்சி மற்றும் வேளாண்துறை சார்பில் கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட்டன.திண்டிவனத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.

நேரு வீதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், திண்டிவனம் பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள மைதானத்திலும், உழவர்சந்தை காய்கறி கடைகள் வால்டர் மேல்நிலைப் பள்ளியிலும் ஒரு மாத்திற்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், திண்டிவனம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், மற்ற கடைகள் செயல்படுவது போல், காய்கறி கடைகளையும் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தும் வகையில், 21ம் தேதி முதல் தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை காய்கறி கடைகள் அடைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் திண்டிவனத்திற்கு ஆய்வுக்கு வந்த கலெக்டர் அண்ணாதுரை நகராட்சி அதிகாரிகளிடம், பொது மக்களுக்கு காய்கறிகள் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.அதன் பேரில், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே நகராட்சி வாகனங்கள் மூலம் வார்டு வாரியாக குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கடையடைப்பு காரணமாக, திண்டிவனத்தில் வேளாண்துறை சார்பில் கூடுதலாக காய்கறி வாகனங்களை ஈடுபடுத்தப்படும்.காய்கறி கடைகளை பழைய இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து கலெக்டர் உத்தரவிட்டால் தான் சாத்தியமாகும். அதுவரை திண்டிவனம் பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள மைதானத்தில்தான் செயல்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், முதல் நாளான நேற்று 21ம் தேதி திண்டிவனம் பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மைதானத்திலும் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் செயல்படவில்லை.

வால்டர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் நேற்று காலை 6:00மணியிலிருந்து 9:00மணி வரை உழவர்சந்தை காய்கறி கடைகள் செயல்பட்டது. காலையிலிருந்து மாலை வரை செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் மூடப்பட்டதால், பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, காய்கறி வியாபாரிகள் போராட்டத்தை சமாளிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கும் வகையில், நகராட்சி மற்றும் வேளாண்துறை சார்பில், திண்டிவனத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும்,நேற்று முதல் கூடுதலாக நடமாடும் காய்கறி கடைகள்செயல்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X