பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு கணக்கெடுப்பு; முதுமலையில் துவக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement
 வனவிலங்கு கணக்கெடுப்பு; முதுமலையில் துவக்கம்

கூடலுார்;முதுமலையில், பருவமழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. முதுமலை உள்வட்ட பகுதியில், வனவிலங்கு கணக்கெடுப்பு நேற்று, துவங்கியது.வனச்சரகர்கள், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், கணக்கெடுப்பு பணி மேற்கொண்டுள்ளனர். இதற்காக வனப்பகுதி, 29 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் குறித்த விபரங்களை, 'டேட்டா ஷீட்' மற்றும் மொபைல் போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணி, 26ம் தேதி நிறைவு பெறுகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'வன உயிரினங்கள் மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள், மரங்கள் குறித்த விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. 27ம் தேதி முதல் முதுமலை வெளிவட்ட பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X