பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்கள் வருகை அதிகரிப்பு: சோதனைச்சாவடிகளில் புதிய நடைமுறை

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சோதனைச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.ஊரடங்கு உத்தரவு பல்வேறு பகுதிகளிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சென்னை, வெளிமாநில வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகளில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை ரூரல் எஸ்.பி., சுஜித்குமார் கூறுகையில்,''வாகனங்களை சோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, கனரக வாகனங்கள் பிரதான ரோட்டிலும், பிற வாகனங்கள், சர்வீஸ் ரோட்டிலும் மட்டும் அனுமதிக்கப்படும். வாகன ஓட்டிகளின் உடல்வெப்பநிலை கணக்கிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். தேவைக்கேற்ப கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.நேற்று கலெக்டர் ராஜாமணி மற்றும் எஸ்.பி., சுஜித்குமார் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர். சோதனைச்சாவடிகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோர், கைகளில் முத்திரை இடப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X