பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு 'பிளாட்டினம்' சான்றிதழ்

Added : மே 22, 2020
Share
Advertisement

கோவை:கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, பிளாட்டினம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு 'லக் ஷயா' சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கென மத்திய அரசின் சார்பில் சிறப்பு நிதி வழங்கப்படுகிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான சிகிச்சையளித்து, தாய் -- சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும், 'லக் ஷயா' சான்றிதழ் வழங்கப்படும்.கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, 'லக் ஷயா' சான்றிதழ் அளிப்பது தொடர்பாக மத்திய குழு அதிகாரிகள் கடந்த பிப்.,மாதம் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையின், பிரசவ வார்டு, அறுவைசிகிச்சை அரங்கு, தாய் சேய் வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், மத்திய அரசு கூறியுள்ள அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அதன்படி, கோவை அரசு மருத்துவமனை 93 மதிப்பெண் பெற்றது. இதனால், பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி அளிக்கப்படும். இந்த நிதி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X