பொது செய்தி

தமிழ்நாடு

2 லட்சம் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடனுதவி

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை, மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:விவசாய நாடாக, நம் நாடு இருந்தும், உணவுப் பதப்படுத்தும் தொழில், அமைப்புசாரா துறையாகவே உள்ளது. குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களுக்காக, ஐந்து ஆண்டு காலத்துக்கான, 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம், இதற்கான செலவுகளைப் பங்கிட்டுக்கொள்ளும்.நாடு முழுதும், இரண்டு லட்சம் குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள், மானியத்துடனான கடனுதவியைப் பெற முடியும். 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கப்படும் நிறுவனம், 35 சதவீதம் மானியம் பெற முடியும். நிறுவனங்கள், 10 சதவீதம் முதலீடு செய்திருக்க வேண்டும்.விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அதிகளவில் இத்துறையில் ஈடுபடுத்தப்படுவர். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்துதல், உணவு விளைபொருட்கள் வீணாவது தடுக்கப்படுதல், விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றை, இத்திட்டம் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X