விழுப்புரம் மாவட்டத்தில்அனல் காற்றால் மக்கள் அவதி

Added : மே 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு லேசான மழை பெய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் மற்றும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவுறுத்தியது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X