பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக்கில் மதுபாட்டில் விற்பனை 'டல்'கூட்ட நெரிசலின்றி கடைகள் 'வெறிச்'

Added : மே 22, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் வருகை குறைந்துள்ளதால், கடைகள் வெறிச்சோடி மதுபாட்டில் விற்பனை குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் வருகை குறைந்துள்ளதால், கடைகள் வெறிச்சோடி மதுபாட்டில் விற்பனை குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 226 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களில் கடந்த 7ம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அப்போது கடைகளில் குடிமகன்கள் கூட்டம், அதிகரித்து காணப்பட்டது. இதனால், அன்று ஒரு நாள் மட்டும் ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5.75 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையானது.இந்நிலையில், நிபந்தனைகளைக் கடைபிடிக்கவில்லை என டாஸ்மாக் கடைகள் திறக்க கடந்த 8ம் தேதி சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 16ம் தேதி மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 165 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால், மீண்டும் டாஸ்மாக் கடைகளை மூடப்படுமோ என்ற அச்சத்தில் மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச்சென்று வீடுகளில் 'ஸ்டாக்' வைத்தனர்.டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மட்டுமே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள குடிமகன்கள் போதிய வருவாய் இல்லாமல், டாஸ்மாக் கடைக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இதனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் குறைந்ததால், மதுபாட்டில் விற்பனையும் குறைந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள கிராமப்புற டாஸ்மாக் கடைகளில் கூட்டமின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X