பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டுக்கு ஒரு முறை விளையும் பனிப்பயிர்

Added : மே 22, 2020
Share
Advertisement

செஞ்சி; தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பனிப்பயிர் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை உள்ள சீதோஷ்ண நிலையில் குறைந்த அளவு தண்ணீருடன் மானாவாரி பயிராக பனிப் பயிர் சாகுபடி செய்கின்றனர். வழக்கமான காராமணி பயிரின், உயர் ரகத்தைச் சேர்ந்த பனிப்பயிர் காராமணி பயிரை விட அளவில் சிறியதாகவும், ரோஸ் மற்றும் பிரவுன் நிறங்களில் இருக்கும்.இந்த ரக பயிரை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சப்பாத்தி, தோசைக்கு தயார் செய்யப்படும் டாலுக்கு (பருப்பு சாம்பார்) பயன்படுத்துகின்றனர். தண்ணீர் தேவையின்றி பனிப்பொழிவில் மானாவாரி நிலத்தில் விளையும் இந்த பனிபயிரை விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி தாலுக்காவில் அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சாகுபடி இருக்கும். 3 மாத பயிரான இதன் அறுவடை பிப்ரவரி மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும்.இந்த ஆண்டு அறுவடை துவங்கி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விற்பனைக்கு வந்த போது மார்ச் மாதத்தில் 100 கிலோ பனிப் பயிர் 9,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. கொரோனா பிரச்னையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூடப்பட்டன.இதனால் அறுவடை செய்த பனிப்பயிர்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வீடுகளிலேயே இருப்பு வைத்திருந்தனர். கடந்த 20 நாட்களாக மீண்டும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படத் துவங்கியதும், விவசாயிகள் பனிப்பயிரை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.வழக்கமாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏற்படும் தேவையை கொண்டே இதன் விலை நிர்ணயிக்கப்படும். ஊரடங்கினால் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஓட்டல்கள், தெரு ஓர கடைகள் மூடப்பட்டு இருப்பதால் பனிப்பயிர் தேவை வெகுவாக குறைந்துள்ளது.இதனால் மார்ச் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான பனிப்பயிர் இந்த வாரம் அதிக பட்சமாக 7,100 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த ரக பனிப்பயிர்களை அதிக நாட்கள் இருப்பு வைத்தால் வண்டு துளைத்து மாவாகிவிடும். நிறமும் மங்கி விடும். எனவே காத்திருந்து விலை உயர்ந்ததும் விற்பனை செய்ய வழியின்றி உடனே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.ஒன்னரை மாத இடை வெளியில் மூட்டை ஒன்றுக்கு 3,000 ரூபாய் வரை விலையில் சரிவு ஏற்பட்டிருப்பது பனிப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X