ஒரத்துாரில் கொரோனா தொற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரத்துாரில் கொரோனா தொற்று

Added : மே 22, 2020
Share

விக்கிரவாண்டி;விக்கிரவாண்டி அருகே செவிலியருக்கு கொரோனா தொற்று காரணமாக அவர் வசிக்கும் பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண். இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19ம் தேதி சென்னையிலிருந்து ஒரத்துாருக்கு வந்தவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை இவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் மருத்துவக் குழுவினர் நர்சை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.மேலும் இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி பி.டி.ஓ.,க்கள் எழிலரசு நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஒரத்தூர் கிராமத்தில் வெளியாட்கள் யாரும் நுழையாதவாறு தடைகளை அமைத்தனர். கிராமத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்து நோய்த்தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X