பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் நேரு வீதிஒருவழி பாதையாக மாற்றம்

Added : மே 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்;திண்டிவனம் நேரு வீதி ஒருவழி பாதையாக மாற்றி போலீசார் அறிவித்துள்ளனர்.திண்டிவனம் டி.எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:திண்டிவனம் நேரு வீதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி எதிர் திசையில் வரும் வாகனங்களை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்படும். நேரு வீதியில் எக்காரணத்தை முன்னிட்டும் இருசக்கர வாகனங்களோ, நான்கு சக்கர வாகனங்களோ நிறுத்த அனுமதி கிடையாது.மேலும், நேரு வீதிக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களான வண்டிமேடு, தாலுகா அலுவலகம் எதிரிலும், மேலும் புது மசூதி தெரு, இந்தியன் வங்கி மற்றும் ஓ.பி.ஆர்., பார்க் ரோடு ஆகிய பகுதிகளுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடமான பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும்.மேலும், நேரு வீதி, ராஜாஜி வீதி, புது மசூதி தெரு ஆகிய இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X