சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியரை தாக்கிய இருவர் கைது

Added : மே 22, 2020
Share
Advertisement

திண்டிவனம்;திண்டிவனம் அருகே, பணியிலிருந்த ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அருகே புறங்கரை கிராமத்தை சேர்ந்த தேவசகாயம் மகன் சின்னப்பன்,43; கீழ் ஆதனுார் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.நேற்று இவர் பணியில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சுப்புராயன் மகன் ராமகிருஷ்ணன்,33; கேசவன் மகன் மணிகண்டன்,32; ஆகியோர் பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டி தாக்கியதோடு, தராசு இயந்திரத்தை உடைத்து, அங்கிருந்த 3 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து, ராமகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X