இந்தியா

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

Added : மே 22, 2020
Share
Advertisement

திருபுவனை: பைக் பின்னால் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்து இறந்தார்.விழுப்புரம் மாவட்டம் வி.புதுார் இளங்காடு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் துரை 39; மனைவி குமாரி 36; மூன்று குழந்தைகள் உள்ளனர்.கண்டமங்கலம் அடுத்த பெரியபாபு சமுத்திரம் கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்தனர். வீட்டிற்கு சென்றிருந்த அவர் தனது உறவினரான விழுப்புரம் மாவட்டம் ஆசூரில் வசிக்கும் அஜித் 19; என்பவருடன் பைக்கில் நேற்று முன் தினம் மாலை பெரியபாபு சமுத்திரம் திரும்பினார். வினாயகம்பட்டு சாராயக்கடை அருகே சாலையில் பள்ளம் இருந்ததால் அஜித், பிரேக் போட்டுள்ளார். இதில் குமாரி கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.வில்லியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X