இந்தியா

தர்ணா போராட்டம் மா. கம்யூ., தீர்மானம்

Added : மே 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாளை மா.கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.புதுச்சேரி மா.கம்யூ., பிரதேச செயற்குழு கூட்டம், பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில், மத்திய பா.ஜ., அரசின் சுயசார்பு திட்ட அறிவிப்பில் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற முடிவை மா.கம்யூ., கண்டிக்கிறது. இது, மக்களை மேலும் பாதிக்கும் என்பதுடன், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாகும். புதுச்சேரி மின் துறையை தனியாரிடம் விடக்கூடாது. மத்திய அரசின் மக்கள் விரோத முடிவை எதிர்த்து, மா.கம்யூ., சார்பில் நாளை 23ம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X