இந்தியா

10ம் வகுப்பு மாணவர்களுக்கு காணொளி காட்சி வழியாக பாடம்: பார்வையாளர்கள் 1.02 லட்சம் பேர்

Added : மே 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி கல்வித்துறையின் யூடியூப் தொலைக்காட்சியை பார்ப்போர் எண்ணிக்கை 1.02 லட்சத்து 250ஐ கடந்துள்ளது.புதுச்சேரி கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஊரடங்கு உத்தரவு அமலில், இருப்பதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் காணொளி காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. .கல்வித்துறை வளாகத்தில் உள்ள மெய்நிகர் கட்டுப்பாட்டு அறைக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கேட்ட சுமார் 90 கேள்விகளுக்கு நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் விளக்கங்களை அளித்தனர்.ஒளிப்பதிவு செய்யப்பட்ட அனைத்து பாடங்கள் மற்றும் நேரடி கேள்வி பதில் ஒளிபரப்பு, கல்வித்துறையின் யூடியூப் தொலைக்காட்சியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. இந்த யூடியூப் தொலைக்காட்சி 3,750 சந்தாதாரர்களை கடந்துள்ளது.ஒரு நாளில் மட்டும் 23 சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதுடன், இந்த யூடியூப் தொலைக்காட்சியை பார்ப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து இரண்டாயிரத்து 250ஐ கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை 1,089 அதிகரித்துள்ளது.ஊரடங்கு காலத்தில் கல்லுாரி மாணவ-மாணவிகள் வீட்டிலிருந்தவாறே படிப்பை தொடரும் வகையில் இணையம் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 19ம் தேதி வரை 1068 கல்லுாரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். 19ம் தேதி 248 கல்லுாரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X