அமெரிக்கா தலையிட வேண்டாம்: சீன வெளியுறவு துறை அதிகாரி கொந்தளிப்பு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

பீஜிங்: ''இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது, முட்டாள்தளமான செயல். இந்தியாவுடனான எல்லை பிரச்னையை சுமுகமாக பேசித் தீர்ப்போம். இதில், அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, சீன வெளியுறவுத் துறை அதிகாரி ஜாவோ லிஜான் கூறியுள்ளார்.



latest tamil news



இந்திய எல்லையில், சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, எல்லையில் பதற்றம் நிலவியது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்திய பின், பதற்றம் குறைந்தது. இது குறித்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், 'எல்லையில் உள்ள சுமுகமான நிலையை, சீனா, பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நாடுகளுடன், அத்துமீறி செயல்படுவதே, சீனாவுக்கு வழக்கமாக உள்ளது' என்றார். இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news



சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜான் கூறியதாவது: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, துாதரக ரீதியில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அதை, இரு நாடுகளும் செய்து வருகின்றன. இந்த விஷயத்தில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது முட்டாள்தனமானது.

இந்திய - சீன எல்லை பிரச்னையில் தலையிட வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை. எல்லை பகுதியில், சீன வீரர்கள் எப்போதுமே அமைதியான சூழலைத் தான் கடைப்பிடிக்கின்றனர். இந்த விஷயத்தில், எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்படி இந்திய தரப்புக்கு வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
22-மே-202014:40:04 IST Report Abuse
thulakol உலக நாடுகள் சீனா பகிஷ்கரம் செய்யவேண்டும்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-மே-202013:42:30 IST Report Abuse
Sridhar வீரர்களை குவித்து பதற்றத்தை உருவாக்கி அப்புறம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றால் எப்படி? இந்தியா பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடித்துவிடக்கூடாது அதை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கோடு சீனா செய்துவரும் இச்செயல்களால் இந்தியாவின் நிலை மாறுமா? பலுசிஸ்தானையும் சேர்த்து பிடிக்கவேண்டும். சில்க் ரோட் திட்டத்தை சின்னாபின்னமாக்கி சீனாவை நம் காலடியில் கொண்டுவரவேண்டும். செய்வாரா தோவல்?
Rate this:
Ray - Chennai,இந்தியா
25-மே-202008:28:18 IST Report Abuse
Rayகௌரி கல்யாண வைபோகமே லக்ஷ்மி கல்யாண வைபோகமே அகமதாபாத்தில் ஊஞ்சல் ஆடியது டொவ்வாலா? பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர்கள் நடவடிக்கை வேண்டும்?...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-மே-202010:51:49 IST Report Abuse
S.Baliah Seer உலகையே நாறடித்துக்கொண்டிருக்கும் சீனாவின் சொல், அது உண்மையாக இருப்பினும் யார் காதிலும் விழாது, அப்படியே விழுந்தாலும் அதை கேட்க யாரும் தயாராய் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X