அமெரிக்கா தலையிட வேண்டாம்: சீன வெளியுறவு துறை அதிகாரி கொந்தளிப்பு| Chinese Foreign Ministry asks US not to intervene in India-China border issue | Dinamalar

அமெரிக்கா தலையிட வேண்டாம்: சீன வெளியுறவு துறை அதிகாரி கொந்தளிப்பு

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020 | கருத்துகள் (11)
Share

பீஜிங்: ''இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது, முட்டாள்தளமான செயல். இந்தியாவுடனான எல்லை பிரச்னையை சுமுகமாக பேசித் தீர்ப்போம். இதில், அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, சீன வெளியுறவுத் துறை அதிகாரி ஜாவோ லிஜான் கூறியுள்ளார்.latest tamil newsஇந்திய எல்லையில், சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, எல்லையில் பதற்றம் நிலவியது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்திய பின், பதற்றம் குறைந்தது. இது குறித்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், 'எல்லையில் உள்ள சுமுகமான நிலையை, சீனா, பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நாடுகளுடன், அத்துமீறி செயல்படுவதே, சீனாவுக்கு வழக்கமாக உள்ளது' என்றார். இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil newsசீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜான் கூறியதாவது: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, துாதரக ரீதியில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, அதை, இரு நாடுகளும் செய்து வருகின்றன. இந்த விஷயத்தில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது முட்டாள்தனமானது.

இந்திய - சீன எல்லை பிரச்னையில் தலையிட வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை. எல்லை பகுதியில், சீன வீரர்கள் எப்போதுமே அமைதியான சூழலைத் தான் கடைப்பிடிக்கின்றனர். இந்த விஷயத்தில், எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்படி இந்திய தரப்புக்கு வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X