இந்தியா

காரைக்காலில் 1௦௦ வாய்க்கால்கள் துார் வாரும் பணி ஜரூர்

Added : மே 22, 2020
Share
Advertisement

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 100 வாய்க்கால்கள் துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா கூறியுள்ளார்.அவர் கூறியதாவது;ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், காரைக்கால் மாவட்டத்தில் நீர் வரத்து வாய்க்கால்களை துார் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.நுாறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பல இடங்களில் வாய்க்கால்களை துார் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 27 கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பிரதான வாய்க்கால் அனைத்தும் துார் வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுப்பணி துறை மூலம் பல்வேறு இடங்களில் உள்ள 100 வாய்க்கால்கள் கணக்கிடப்பட்டு, துார் வார ஒப்படைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வருவதற்கு முன்பு அனைத்து பணிகளும் முடிக்கப்படும். நுாறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X