இந்தியா

சாராய ஆலையில் முறைகேடு கவர்னரிடம் எம்.எல்.ஏ., புகார்

Added : மே 22, 2020
Share
Advertisement

புதுச்சேரி;'சாராய வடி ஆலையில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்' என கவர்னர் கிரண்பேடிக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து அவர் கவர்னரிடம் அளித்துள்ள மனு:கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் புதுச்சேரியில் கள், சாராயம், மதுபான கடைகள் மூடப்பட்டன.அதேநேரத்தில் புதுச்சேரி சாராய வடி ஆலையில் மிகப் பெரும் முறைகேடு நடந்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் லிட்டர் சாராயம் அரசு வடி ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. 6 டேங்கர் லாரிகளில் 10 லட்சம் லிட்டர் சாராயமும் புதுச்சேரிக்கு கொண்டுவரப் பட்டிருந்தது.மதுபான கடைகள் சீல் வைக்கப்பட்டாலும், அரசு சாராய வடி ஆலை சீல் வைக்கப்படவில்லை. இந்த ஆலையின் நிர்வாகத்தில் இருந்தவர்களோடு சிலர் ரகசிய கூட்டணி அமைத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயத்தை கொள்ளையடித்து, வரி ஏய்ப்பு செய்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர்.எனவே கவர்னர் அரசு சாராய வடி ஆலையில் இருப்பு இருந்த சாராயம் எவ்வளவு, ஊரடங்கிற்கு பின் எவ்வளவு சாராயம் குறைந்துள்ளது என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசின் வருவாயை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சாராய வடி ஆலையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X