இந்தியா

பணிக்கு தாமதமாக சென்றவர்களை அதிகாரிகள் அனுப்பியதால் பரபரப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement

திருக்கனுார்;செட்டிப்பட்டில் ஊரக நுாறு நாள் வேலை திட்ட பணிக்கு தாமதமாக சென்ற பெண்களை அதிகாரிகள் திரும்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஊரக 100 நாள் வேலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, 100 நாள் வேலை திட்டப் பணிகளின் நேரம், காலை 7:00 முதல் 11:00 மணி வரையிலும், மாலை 3:00 முதல் 5:00 மணி வரையிலும் மாற்றப்பட்டுள்ளது.செட்டிப்பட்டில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நேற்று 100 நாள் வேலை திட்டப்பணிக்கு, பெண்கள் சரியான நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. இதனால், இன்று (21ம் தேதி) வேலை கிடையாது என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தொகுதி எம்.எல்.ஏ., செல்வத்திற்கு தகவல் தெரித்தனர். திட்ட இயக்குனர் ரவிபிரகாஷிடம், எம்.எல்.ஏ., பேசியதை தொடர்ந்து, மீண்டும் வேலை செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X