இந்தியா

வங்கி கடனுதவி விண்ணப்பங்கள் தமிழில் வழங்க காங்., வலியுறுத்தல்

Added : மே 22, 2020
Share
Advertisement

திருக்கனுார்;விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கான கடனுதவி விண்ணப்பங்களை தமிழ் மொழியில் அச்சிட்டு வழங்க வேண்டும் என காங்., வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து, காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில் அச்சிட்டு வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, கடனுதவி விண்ணப்பங்களை தமிழ் மொழியில் அச்சிட்டு விநியோகிகக வேண்டும். மாகி பகுதியில் மலையாளத்திலும். ஏனாம் பகுதியில் தெலுங்கு மொழியிலும் விண்ணப்பங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X