இந்தியா

தீவனம் விலை கடும் உயர்வு கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

Added : மே 22, 2020
Share
Advertisement
திருக்கனுார்;கொரோனா ஊரடங்கு காரணமாக திருக்கனுார் பகுதியில், தீவனம் விலை அதிகரித்துள்ளதால்,கால்நடை வளர்ப்போர்சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திருக்கனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் ஆடு, மாடு, கோழி பண்ணைகள் உள்ளன. கொரோனாஊரடங்கு காரணமாக,கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர்

திருக்கனுார்;கொரோனா ஊரடங்கு காரணமாக திருக்கனுார் பகுதியில், தீவனம் விலை அதிகரித்துள்ளதால்,கால்நடை வளர்ப்போர்சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திருக்கனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் ஆடு, மாடு, கோழி பண்ணைகள் உள்ளன. கொரோனாஊரடங்கு காரணமாக,கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.கிலோரூ.30க்குவிற்ற புண்ணாக்கு, 40 முதல் 45 ரூபாய் வரையிலும், ஆயிரம் ரூபாயாக இருந்தகோதுமை தவிடு 1,350 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.உலர் தீவனங்களின் விலையும், கடந்த இரண்டு மாதங்களில் ரூ. 200 வரை அதிகரித்துள்ளது.கால்நடை வளர்ப்போர் கூறுகையில்,'ஊரடங்கு காரணமாககால்நடைதீவனங்கள், புண்ணாக்கு உள்ளிட்டவற்றின்விலை இரண்டு மாதங்களில் மட்டும் 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. ஆனால், பால் கொள்முதல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. வேலையின்றி தவிக்கும் சூழ்நிலையில் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளதால், அவற்றிற்கு சத்தான தீவனம் அளிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். கால்நடைகளுக்கான தீவனங்களை அரசே மானிய விலையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் விற்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும்நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனகூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X